சிறிலங்காவில் பணவீக்கம் செப்டம்பரில் -0.2% ஆக வீழ்ச்சி
2024 செப்டெம்பர் மாதத்திற்கான அனைத்து விடயங்களுக்குமான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 203.1 ஆகும்.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் அளவிடப்பட்டவாறான ஒட்டுமொத்த பணவீக்க வீதம் 2024 ஆகஸ்டின் 1.1 சதவீதத்திலிருந்து 2024 செப்டெம்பரில் -0.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது என தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்தில் 2.3% ஆக இருந்த உணவுப் பணவீக்கமும் செப்டம்பரில் 0.5% ஆக குறைந்துள்ளது.
2024 செப்டெம்பர் மாதத்திற்கான அனைத்துப் பொருட்களுக்குமான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 203.1 ஆகும் என்பதுடன் அது 2024 ஆகஸ்டுடன் ஒப்பிடும் போது சுட்டெண் புள்ளிகளில் 1.0 வீழ்ச்சியினைப் பதிவுசெய்கின்றது.
2024 செப்டெம்பர் மாதத்திற்கான அனைத்து விடயங்களுக்குமான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 203.1 ஆகும். சுட்டெண் 204.1 ஆக இருந்த 2024 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.0 சுட்டெண் புள்ளிகள் அல்லது 0.48 சதவீத குறைவாகும். இந்த வீழ்ச்சியானது "சந்தைக் கூடையில்" செலவுப் பெறுமதியில் ரூபா 500.25 வீழ்ச்சியைக் குறிக்கிறது.
ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் அளவிடப்பட்டவாறான ஒட்டுமொத்த பணவீக்க வீதம் 2024 செப்டெம்பரில் -0.2% ஆக இருந்ததுடன் 2024 ஆகஸ்டில் கணக்கிடப்பட்ட பணவீக்கம் 1.1% ஆக இருந்தது.