இந்திய வெளிவிவகார செயலாளர் அடுத்த வாரம் சிறிலங்கா வரவுள்ளார்
பதவியேற்றதிலிருந்து, ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் முதல் முறையாக இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா எதிர்வரும் வாரத்தில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ஜூலை 20 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயம் தொடர்பான ஏற்பாடுகளைச் செய்வதற்காக குவாத்ரா அடுத்த வார தொடக்கத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் 2022 இல் பதவியேற்றதிலிருந்து, ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் முதல் முறையாக இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார். இதன் போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கடற்றொழில், எரிசக்தி மற்றும் மின்சக்தி, வெளிவிவகார அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, காஞ்சன விஜேசேகர மற்றும் அலி சப்ரி ஆகியோர் ஜனாதிபதியுடன் அவரது தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்கவுடன் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.