Breaking News
இந்திய மானியத்தின் கீழ் கட்டப்பட்ட மேலும் பல வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு
25 மாவட்டங்களிலும் மாதிரி கிராம வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மொனராகலையில் உள்ள தித்தவெல்கிவல மாதிரி கிராமத்தை 24 பயனாளிக் குடும்பங்களுக்கு திறந்து வைத்து கையளித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் மானிய ஆதரவுடன் இலங்கையின் கிராமிய மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாண அமைச்சுடன் இணைந்து தீவின் 25 மாவட்டங்களிலும் மாதிரி கிராம வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.