Breaking News
எலோன் மஸ்க் பயனாளர்களை கட்டுப்படுத்துவதாக குற்றச்சாட்டு

டுவிட்டர் தொடர்பில் வெளியாகிய புதிய திருத்தம் தொடர்பில் டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர் பயனாளர்களை கட்டுப்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
டுவிட்டர் நிறுவனம் அதன் பயனாளர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்வீட்களைப் படிக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் சரிபார்க்கப்படாத பயனாளர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ட்வீட்களையும், சரிபார்க்கப்பட்ட பயனாளர்கள் 10 ஆயிரம் ட்வீட்களையும் படிக்க முடியும் என டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலோன் மஸ்க் ஒரு சமூக ஊடக நிறுவனத்திற்குள் புரிந்துகொள்ள முடியாத ஒன்றைச் செய்து கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் பயனாளர்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.