சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கைது
வெத்தலகேணி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட விரைவு தாக்குதல் படகுகளை அனுப்பியதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் காரணமாக இந்திய மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சிறிலங்காக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வெத்தலக்கேணி பகுதியில் இந்த விசேட நடவடிக்கை திங்கட்கிழமை (02) இடம்பெற்றது. கைது செய்யப்பட்ட போது, மீன்பிடி படகு சுமார் 30 கடல் மைல் தூரம் சர்வதேச கடல் எல்லையை கடந்து இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தது.
வெத்தலகேணி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட விரைவு தாக்குதல் படகுகளை அனுப்பியதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்பெறுபேறாக 1 இந்திய மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டதுடன், 18 இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் சிறிலங்காக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட படகு மற்றும் 18 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிறிலங்காக் கடலோர காவல்படையின் வடக்குப் பிராந்திய பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.