Breaking News
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் புகார்கள் 2,500ஐ தாண்டியுள்ளது
சனிக்கிழமை (9) மேலும் 232 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை (9) மேலும் 232 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, செப்டம்பர் 26ஆம் திகதி முதல் நவம்பர் 09ஆம் திகதி வரையான நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் மொத்தம் 2,580 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.