பாராளுமன்ற உறுப்பினர்களின் கொழும்பு துறைமுக விஜயத்தை காணொலிப் பதிவு செய்தவர்களைக் கைது செய்யுங்கள்: இராஜாங்க அமைச்சர்
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு கொழும்பு துறைமுகத்திற்கு ஆய்வு சுற்றுப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கொண்ட ஆய்வுப் பயணத்தைச் சட்டவிரோதமாகக் காணொலிப் பதிவு செய்த துறைமுக அதிகாரசபைத் தொழிற்சங்க உறுப்பினர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்ய வேண்டும் எனவும் துறைமுக மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கூறினார்.
வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு ஜெட்டியை பார்வையிட வேண்டும் என்றும், மேற்கு படகுத்துறையின் பணிகள் ஏன் தாமதமாகின்றன என்பதை பார்வையிட வேண்டும் என்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு கொழும்பு துறைமுகத்திற்கு ஆய்வு சுற்றுப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பது இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் எனது கடமையாகும். சில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் எங்களுக்கு விருந்து இருப்பதாக கூறி இந்த பயணம் குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சில தொழிற்சங்க உறுப்பினர்கள் இந்த விஜயத்தை சட்டவிரோதமாகக் காணொலிப் பதிவு செய்திருந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அவர்களை சிஐடி காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்" என்றார்.