ஏ. பி தில்லான் வீட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவம்: இந்திய-கனடியர் கைது
தற்போது இந்தியாவில் இருப்பதாக நம்பப்படும் 23 வயதான விக்ரம் சர்மாவுக்கும் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் உத்தரவின் பேரில் பஞ்சாபி பொழுதுபோக்கு நடிகர் ஏ.பி.தில்லானின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக இந்திய-கனடியர் ஒருவரை கைது செய்துள்ளதாக கனடிய காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் அல்லது ஆர்.சி.எம்.பியின் வெஸ்ட் ஷோர் படைப்பிரிவு அக்டோபர் 30 அன்று நடந்த கைது குறித்து வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தது. செப்டம்பர் 2 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் தீ வைப்பு ஆகியவை அடங்கும். இரண்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட இளைஞர் மனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக்கில் வசிக்கும் 25 வயதான அப்ஜீத் கிங்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். உள்நோக்கத்துடன் துப்பாக்கியால் சுட்டது, தீ வைத்தது ஆகிய குற்றச்சாட்டுகள் கிங்ரா மீது சுமத்தப்பட்டுள்ளன. ஒன்ராறியோவில் உள்ள ஒரு இடத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது இந்தியாவில் இருப்பதாக நம்பப்படும் 23 வயதான விக்ரம் சர்மாவுக்கும் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படும் வரை இந்த விசாரணையையும், நிலுவையில் உள்ள சந்தேக நபரையும் நாங்கள் தொடர்ந்து தொடர்வோம்" என்று வெஸ்ட் ஷோர் ஆர்.சி.எம்.பி கண்காணிப்பாளர் டோட் பிரஸ்டன் கூறினார்.