போக்குவரத்து துறையில் புதைபடிவ எரிபொருள் மாற்றுகளை மேம்படுத்துவதில் சிறிலங்காவும் இந்தியாவும் ஒத்துழைக்கும்
போக்குவரத்துத் துறையில் மின்சாரம் மற்றும் உயிரி எரிபொருட்கள் போன்ற புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்று வழிகளை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இந்தியாவுக்கான சிறிலங்கா உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து விடைபெற்றார். போக்குவரத்துத் துறையில் மின்சாரம் மற்றும் உயிரி எரிபொருட்கள் போன்ற புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்று வழிகளை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர்.
ஆகஸ்ட் 24 அன்று புதுதில்லியில் அமைச்சர் கட்கரியை மொரகோட சந்தித்தார்.
புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றானவை சிறிலங்கா போன்ற ஒரு நாட்டிற்கு ஏற்றதாகவும், மிகவும் செலவு குறைந்ததாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் காணப்படுவதாக, புதுதில்லியில் உள்ள சிறிலங்கா உயர்ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாற்று எரிபொருளில் தனது நாட்டின் அனுபவம் குறித்து பேசிய இந்திய அமைச்சர், அது தொடர்பான நிபுணத்துவத்தை சிறிலங்காவுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.