Breaking News
மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் மூச்சுத் திணறச் செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர்: காவல்துறை
செந்துல் காவல்துறையின் தலைமை உதவி ஆணையர் அஹ்மத் சுகர்னோ முகமட் ஜஹாரி கூறுகையில், கொலைக்கான காரணத்தை காவல்துறை இன்னும் கண்டறியவில்லை.

கோலாலம்பூர், செந்துல் பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் இறந்து கிடந்த மூன்று இலங்கையர்களும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தி மூச்சுத் திணறிக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
செந்துல் காவல்துறையின் தலைமை உதவி ஆணையர் அஹ்மத் சுகர்னோ முகமட் ஜஹாரி கூறுகையில், கொலைக்கான காரணத்தை காவல்துறை இன்னும் கண்டறியவில்லை.
" இறப்பிற்கான காரணம் (பாதிக்கப்பட்டவர்கள்) பிளாஸ்டிக் பைகளில் மூச்சுத் திணறல்" என்று அவர் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்குக் காவல்துறையினர் அறிவித்துள்ளதாகச் சுகர்னோ தெரிவித்துள்ளார்.