சிறிலங்காவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும்
சிறிலங்காவுடன் தொடர்ச்சியான மற்றும் ஒத்துழைப்பு முறையில் பணியாற்றுவது சீன தேசிய மக்கள் காங்கிரசின் முக்கிய எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்க சீனா உறுதி பூண்டுள்ளதாக சீனாவின் தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியற் குழுவின் தலைவர் ஜாவோலெஜி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திசாநாயக்க சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணத்தின் ஒருபகுதியாக நேற்று (16) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்கவுக்கும் ஜாவோலெஜிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, தலைவர் ஜாவோ ஜனாதிபதி திசாநாயக்கவை அன்புடன் வரவேற்றார். மேலும், சிறிலங்காவுடன் தொடர்ச்சியான மற்றும் ஒத்துழைப்பு முறையில் பணியாற்றுவது சீன தேசிய மக்கள் காங்கிரசின் முக்கிய எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்; போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் பொது விமான சேவைகள்அமைச்சர் பிமல் ரத்நாயக்க; சிறிலங்காவுக்கான சீனத்தூதுவர் குய்ஜென் ஹொங்; மற்றும் சீனாவுக்கான சிறிலங்காத் தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.