தமிழகத்தில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி
சாலையும் ஈரமாக இருந்ததால், சில நொடிகளில் மின்சாரம் தாக்கி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 நாள் தேவாலய திருவிழாவில் ஈடுபட்டிருந்த 4 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இணையம் புத்தன்துறை புனித அந்தோணியார் ஆலயத்தில் ஒன்பதாம் நாள் விழாவுக்காக விஜயன், மனோ, ஜெஸ்டஸ், சிவம் ஆகிய நான்கு பேர் தேர் அலங்கரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் ஒரு பெரிய உலோக ஏணியை நகர்த்திக் கொண்டிருந்தபோது, திடீரென உயர் அழுத்த கம்பியுடன் தொடர்பு கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாலையும் ஈரமாக இருந்ததால், சில நொடிகளில் மின்சாரம் தாக்கி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக குளித்தரை அரசு மருத்துவமனைக்கும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.