பைசலாபாத் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்திய முக்கிய சந்தேக குற்றவாளிகள் இருவரைப் பாகிஸ்தான் கைது செய்துள்ளது
பஞ்சாபின் மாகாணத் தலைநகர் லாகூரில் இருந்து 130 கிமீ தொலைவில் உள்ள பைசலாபாத் மாவட்டத்தின் ஜரன்வாலா நகரில், புதன்கிழமையன்று ஆத்திரமடைந்த கும்பல், 21 தேவாலயங்களையும், 35 கிறிஸ்தவர்களின் வீடுகளையும் அடித்து நொறுக்கியது.

21 தேவாலயங்கள் மற்றும் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தினரின் கிட்டத்தட்ட மூன்று டஜன் வீடுகள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேக நபர்களை பாகிஸ்தான் காவல் துறையினர் கைது செய்துள்ளதாக பஞ்சாப் காபந்து முதல்வர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் தலைமைச் செயலாளர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் ஆகியோரின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், முக்கிய சந்தேகக் குற்றவாளிகளைக் கைது செய்வதில் இருவரும் முக்கியப் பங்காற்றியதாகக் கூறினார்.
பஞ்சாபின் மாகாணத் தலைநகர் லாகூரில் இருந்து 130 கிமீ தொலைவில் உள்ள பைசலாபாத் மாவட்டத்தின் ஜரன்வாலா நகரில், புதன்கிழமையன்று ஆத்திரமடைந்த கும்பல், 21 தேவாலயங்களையும், 35 கிறிஸ்தவர்களின் வீடுகளையும் அடித்து நொறுக்கியது.
"ஜரன்வாலா சம்பவத்தில் முக்கிய திருப்புமுனை - இருவரும் தற்போது காவலில் உள்ளனர். தலைமைச் செயலாளர் பஞ்சாப் மற்றும் ஐஜி பஞ்சாப் அவர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு பாராட்டு...," என்று நக்வி சமூக ஊடக தளமான முன்பு ட்விட்டர் என அழைக்கப்பட்ட எஸ்க்ஸ் சமூக வலைதளத்தில் வியாழன் அன்று பதிவிட்டுள்ளார்.