Breaking News
பாகிஸ்தானின் 14-வது அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்வு
அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் தேசிய சட்டமன்றம் மற்றும் செனட்டில் 119 வாக்குகளைப் பெற்றார்.
பாகிஸ்தானின் 14-வது அதிபராக மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி இரண்டாவது முறையாக பதவியேற்றார்.
68 வயதான சர்தாரி, பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) ஆகியவற்றின் கூட்டு வேட்பாளராகவும், அவரது போட்டியாளரான மஹ்மூத் கான் அச்சக்சாய் (75) சன்னி இத்திஹாத் பேரவை (எஸ்ஐசி) வேட்பாளராகவும் இருந்தனர்.
அவர் 255 வாக்குகளைப் பெற்றார், அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் தேசிய சட்டமன்றம் மற்றும் செனட்டில் 119 வாக்குகளைப் பெற்றார்.