Breaking News
விபத்தில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பில், சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
குறித்த மனிதர் தப்பியோடி மார்ட்டின் குரோவ் வீதி மற்றும் டிக்சன் வீதி பகுதியில் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் ரொறன்ரோ காவல்துறைச் சேவை அதிகாரிகளை விட்டு தப்பிச் செல்லும் போது மோதியதில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
ஃபெல்லர் சாலையில், திருடப்பட்டதாக நம்பப்படும் பிக்கப் டிரக் ஒன்றில் ஏறக்குறைய பிற்பகல் 2 மணியளவில் அடையாளம் காணப்படாத காவல்துறை வாகனங்களில் வந்த அதிகாரிகள் ஒருவரைத் தடுக்க முயன்றதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று சிறப்புப் புலனாய்வுப் பிரிவு கூறியது.
குறித்த மனிதர் தப்பியோடி மார்ட்டின் குரோவ் வீதி மற்றும் டிக்சன் வீதி பகுதியில் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக சிறப்புப் புலனாய்வுப் பிரிவு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் அவர் உயிரிழந்தார்.