ஜனாதிபதி திசாநாயக்கவின் விஜயத்தின் போது அரசியல் நம்பிக்கையை ஆழப்படுத்தவும் உறவுகளை வலுப்படுத்தவும் சீனா தயார்
இந்த பயணத்தின் போது ஜனாதிபதி ஷீஜின்பிங் ஜனாதிபதி திசாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
சீன ஜனாதிபதி ஷீஜின் பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவாசுன் யிங் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திசாநாயக்க பதவியேற்ற பின்னர் சீனாவுக்கு மேற்கொண்ட முதலாவது விஜயம், சீன-சிறிலங்கா உறவுகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளருமான குவோஜியாகுன் அதே நாளில் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இந்த பயணத்தின் போது ஜனாதிபதி ஷீஜின்பிங் ஜனாதிபதி திசாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதமர் லீகியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழு தலைவர் ஜாவோலெஜி ஆகியோர் முறையே அவரை சந்திப்பார்கள்.
சீனாவும் சிறிலங்காவும் பாரம்பரிய நட்பு அண்டை நாடுகள் என்று குறிப்பிட்டகுவோ, 1957 ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, சீன-சிறிலங்கா உறவுகள்மாறிவரும் பன்னாட்டு நிலப்பரப்பின் சோதனையில் நின்று, வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியைப் பேணி, வெவ்வேறு அளவுகளைக் கொண்ட நாடுகளுக்கிடையில் நட்பு சகவாழ்வு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த முன்மாதிரியை அமைத்துள்ளன என்று கூறினார்.
பாரம்பரிய நட்புறவைத் தொடர்வதற்கும், அரசியல் பரஸ்பர நம்பிக்கையை ஆழப்படுத்துவதற்கும், உயர்தர ஒரேபாதை ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும், நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் நீடித்த நட்புறவின் அடிப்படையில் இருதரப்பு மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையில் புதிய முன்னேற்றத்திற்காக பாடுபடுவதற்கும், இரு நாட்டு மக்களுக்கும் அதிக நன்மைகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி திசாநாயக்கவின் விஜயத்தை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்வதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்று குவோ தெரிவித்தார்.