Breaking News
கியூபெக் மதச்சார்பின்மை சட்டம் தொடர்பான சட்டச் சவாலை கனடா உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது
நீதிமன்ற வழக்கப்படி மேல்முறையீடு செய்ய அனுமதி கோரிய கோரிக்கை வியாழக்கிழமை காலை எந்த விளக்கமும் இன்றி வழங்கப்பட்டது.

மசோதா 21 என்று அழைக்கப்படும் கியூபெக்கின் சர்ச்சைக்குரிய மதச்சார்பின்மை சட்டத்திற்கு எதிரான நீதிமன்ற சவாலை விசாரிக்க கனடாவின் உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
நீதிமன்ற வழக்கப்படி மேல்முறையீடு செய்ய அனுமதி கோரிய கோரிக்கை வியாழக்கிழமை காலை எந்த விளக்கமும் இன்றி வழங்கப்பட்டது.
நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள், ஆசிரியர்கள் போன்ற அதிகார பதவிகளில் இருக்கும் சில பொதுத்துறை ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது மத அடையாளங்களை அணிவதை மசோதா 21 தடை செய்கிறது.
கியூபெக்கின் நீதித்துறை அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் மற்றும் மதச்சார்பின்மைக்கு பொறுப்பான மந்திரி ஜீன்-பிரான்சுவா ரோபர்ஜ் இருவரும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். கியூபெக் இறுதி வரை சட்டத்தை பாதுகாக்கும் என்று அவர்கள் கூறினர்.