இந்தியாவில் நானாவதி வழக்கு நடுவர் விசாரணைகளை ரத்து செய்தது
அவரது மன்னிப்பைத் தொடர்ந்து, கே.எம்.நானாவதி சில்வியா மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகளுடன் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.

ஓ.ஜெ. சிம்ப்சன், ஒரு காலத்தில் அமெரிக்க கால்பந்து களத்தில் தனது வலிமைக்கு புகழ்பெற்றவர். ஆனால் அவர் ஒரு உயர்மட்ட கொலை விசாரணையால் என்றென்றும் மறைக்கப்பட்டு, தனது 76 வயதில் காலமானார். லாஸ் ஏஞ்சல்சின் புறநகர்ப் பகுதியில் தனது முன்னாள் மனைவி மற்றும் அவரது ஆண் தோழரைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காவல்துறையினர் சிம்சனைப் பின்தொடர்ந்ததும், அதைத் தொடர்ந்த பரபரப்பான வழக்கு விசாரணையும், முக்கிய வழக்கறிஞர்கள் மற்றும் இனவெறி குற்றச்சாட்டுக்கள் ஆகியவை இலட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்தன.
ஒன்பது மாத நீதிமன்ற அறை நாடகங்களைத் தொடர்ந்து, 1995 அக்டோபரில் அவர் விடுவிக்கப்பட்டார். பல அமெரிக்கர்களால் அவநம்பிக்கையுடன் எதிர்கொள்ளப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு திருப்பத்தையும் ஆர்வத்துடன் கவனித்தனர், முன்னாள் தடகள வீரரின் கைகளில் ஒரு ஜோடி கையுறைகளின் பொருத்தம் போன்ற சிக்கலான விவரங்களைக் கூட விவாதித்தனர்.
1959 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஒரு வழக்கு ஓ.ஜே.சிம்ப்சன் விசாரணைக்கு இணையாக இருந்தது. பரவலான கவனத்தை ஈர்த்த அந்த வழக்கு கே.எம்.நானாவதி வழக்கு விசாரணை ஆகும். இந்திய கடற்படை தளபதியான கவாஸ் மானெக்ஷா நானாவதி தனது மனைவியின் காதலன் பிரேம் அகுஜாவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
நானாவதியின் மனைவி சில்வியா, அகுஜாவுடனான தனது உறவை தனது கணவரிடம் ஒப்புக்கொண்டார். பின்னர் நானாவதி தனது மனைவி மற்றும் குழந்தைகளை ஒரு திரையரங்கில் இறக்கிவிட்டுக் கடற்படைத் தளத்திற்கு சென்றார். பொய்யான பாசாங்குகளில், ஆறு தோட்டாக்கள் நிரப்பப்பட்ட தனது கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பிரேம் அகுஜாவின் வீட்டை நோக்கிச் சென்றார்.
நானாவதி அகுஜாவிடம் சில்வியாவை மணக்க உத்தேசித்திருக்கிறாரா என்று விசாரித்தார். அகுஜா மறுக்கவே, நானாவதி மூன்று முறை சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த உடனேயே, கடற்படைத் தளபதி ஒரு காவல் நிலையத்திற்குச் சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். கொலைத் திட்டம் குறித்த விவரங்களை வழங்கி நீதிமன்றத்தில் தனது ஒப்புதல் வாக்குமூலத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த போதிலும், ஒரு நடுவர் மன்றம் நானாவதி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலைக் குற்றச்சாட்டில் அவர் 'குற்றவாளி அல்ல' என்று கண்டறிந்தது. இருப்பினும், இந்த தீர்ப்பு பின்னர் மும்பை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
மார்ச் 11, 1960 அன்று, உயர் நீதிமன்றம் அகுஜாவின் கொலை வழக்கில் நானாவதியைக் குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை பம்பாய் ஆளுநர் உடனடியாக நிறுத்தி வைத்தார்.
எனினும், உச்ச நீதிமன்றம் இந்த முடிவை மாற்றி, கடற்படை அதிகாரியை சிறைக்கு அனுப்பியது. 1963 ஆம் ஆண்டில் உடல்நலக் காரணங்களுக்காக அவருக்குச் சிறை விடுப்பு வழங்கப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டில் புதிய பம்பாய் ஆளுநரும் ஜவஹர்லால் நேருவின் சகோதரியுமான விஜயலட்சுமி பண்டித் மன்னிப்பு வழங்கினார்.
அவரது மன்னிப்பைத் தொடர்ந்து, கே.எம்.நானாவதி சில்வியா மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகளுடன் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.
ஓ.ஜே.சிம்ப்சனின் வழக்கைப் போலவே நானாவதி வழக்கும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கற்பனையைக் கவர்ந்தது. அதன் அதிர்வுகள் பல ஆண்டுகளாக உணரப்பட்டன, அக்ஷய் குமார் நடித்த 2016 ஆம் ஆண்டு திரைப்படமான 'ருஸ்டம்' உட்பட பல புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு ஊக்கமளித்தது, இது விசாரணையின் முடிவை வடிவமைப்பதில் ஊடகங்களின் பங்கை ஆராய்ந்தது.
இந்த விசாரணை இந்தியாவில் நடுவர் மன்ற விசாரணைகளின் முடிவைக் குறித்தது. அரசாங்கம் உடனடியாக அவற்றை ரத்து செய்தது.