அறுகம் வளைகுடா பயங்கரவாத சதிகாரர்கள் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ சந்தேக குற்றவாளிகளின் உதவியை நாடினர்: காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவிப்பு
யோகராஜா நிரோஜன், சுரேஷ் ரஞ்சனா மற்றும் டபிள்யூ.ஏ.டொன் அமரசிறி ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுத்தப்பட்டனர்.
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வருகைதரும் பிரபலமான சுற்றுலாத்தலமான அறுகம் வளைகுடாப் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை இலக்குவைத்து திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்களை பயங்கரவாத விசாரணைப்பிரிவு (டி.ஐ.டி) வெளிப்படுத்தியுள்ளது.
இந்த விவரங்கள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
இந்த குற்றவாளிகள் சிறையில் இருக்கும்போதே இந்த பயங்கரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பயங்கரவாத சதித்திட்டம் தொடர்பில் இதுவரை 7 சந்தேக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
யோகராஜா நிரோஜன், சுரேஷ் ரஞ்சனா மற்றும் டபிள்யூ.ஏ.டொன் அமரசிறி ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுத்தப்பட்டனர்.
சந்தேக குற்றவாளிகளை 90 நாட்களாக விசாரித்த விசாரணை அதிகாரிகள், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்பட்டு நீண்டகால சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களைப் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.