பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்: ஈரானின் குத்ஸ் படை தலைவர் மாயம்
இஸ்ரேலிய என்12 செய்தியின்படி, ஈரானிய பிரிகேடியர்-ஜெனரல் அந்த நேரத்தில் தாகியேவில் (Dahiyeh) இருந்தார். அவர் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்திருக்கலாம்.

பெய்ரூட்டில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு ஈரானிய புரட்சிகர காவல்படையின் (ஐ.ஆர்.ஜி.சி) குட்ஸ் படையின் தளபதி இஸ்மாயில் கானி காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானிய ஊடகங்கள் அவர் இருக்கும் இடம் குறித்து மௌனமாக இருந்தாலும், சில துருக்கிய மற்றும் இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் கானி இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளன.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியான தாஹியேவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசான ஹஷேம் சஃபிதீனை இலக்காகக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல்களுக்குப் பிறகு சஃபிதீனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இஸ்ரேலிய என்12 செய்தியின்படி, ஈரானிய பிரிகேடியர்-ஜெனரல் அந்த நேரத்தில் தாகியேவில் (Dahiyeh) இருந்தார். அவர் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்திருக்கலாம். மற்றொரு இஸ்ரேலிய செய்தி நிறுவனமான சேனல் 12, லெபனான் அதிகாரிகள் கானியின் மரணத்தை உறுதிப்படுத்தியதாகக் கூறியது. இருப்பினும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ஈரானிய தளபதியின் கொலைக்கு உரிமை கோரவில்லை.
அக்டோபர் 1 அன்று ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பின்னர் இஸ்ரேலிய நடவடிக்கைகள் குறித்த அச்சம் காரணமாக கானி கூடுதலான கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சில அறிக்கைகள் ஊகித்தன. இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாத்துடன் ஒத்துழைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கானி ஈரானால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சில சவுதி செய்தி நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன.