ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தயாரிப்பு கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகளுடன் பயங்கரவாத உதவியாளர் கைது
கைது செய்யப்பட்ட மனிதர், ஹரி புதா பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் மற்றும் ராணுவம் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியரான பதிவு செய்யப்பட்ட மேல் மட்டப் (ஓவர்-கிரவுண்ட்) பணியாளர் (ஓ.ஜி.டபிள்யூ) ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு சீன கையெறி குண்டுகளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மனிதர், ஹரி புதா பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் மற்றும் ராணுவம் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு படையினரின் கூற்றுப்படி, பூஞ்சில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு இடையூறு விளைவிக்க ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பயன்படுத்தப்படலாம் என்றனர்.
அப்பகுதியில் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகப் பூஞ்ச் காவல்துறையினர் தெரிவித்தனர்.