ரூ.1,500 முதல் ரூ.2,400! 'ஜவான்' டிக்கெட் விலை வரலாறு காணாத உச்சத்தில்
'ஜவான்' படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் குறித்த அறிவிப்பை ஷாருக் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
ஷாருக்கான் மற்றொரு ஆக்ஷன்-த்ரில்லர் படமான 'ஜவான்' வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். அட்லீ இயக்கிய இப்படம் செப்டம்பர் 7, 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் அடங்கிய திறமையான நட்சத்திரப் பட்டாளம் உள்ளது. இந்தியாவில் 'ஜவான்' படத்திற்கான முன்பதிவு செப்டம்பர் 1 ஆம் தேதி இன்று தொடங்கியது. 'பதான்' வெற்றிக்குப் பிறகு மீண்டும் வரும் ஷாருக்கின் படத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
'ஜவான்' படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் குறித்த அறிவிப்பை ஷாருக் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். புக்மைஷோவின் படி, அட்லீயின் படத்திற்கான மிக விலையுயர்ந்த டிக்கெட் ரூ.2,400 வரை இருக்கும்.
மும்பை மற்றும் டெல்லியில் விற்கப்படும் விலையுயர்ந்த டிக்கெட்டுகள் முறையே ரூ.2,300 மற்றும் ரூ.2,400.
ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட், சமூக ஊடகங்களில் 'ஜவானின் முன்பதிவு' குறித்த புதுப்பிப்பைப் பகிர்ந்துள்ளது. அந்த இடுகையில், "ஆப்கி அவுர் மேரி பெக்ராரி கதம் ஹுயி! ஜவானுக்கான முன்பதிவுகள் இப்போது நேரலையில் உள்ளன. எனவே உங்கள் டிக்கெட்டுகளை இப்போதே முன்பதிவு செய்யுங்கள்! ஜவான் உலகம் முழுவதும் 2023 செப்டம்பர் 7 ஆம் தேதி, ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது."