சிறிலங்கா முதல் பிணை எடுப்பு மீளாய்வை நிறைவேற்றும்: பன்னாட்டு நாணய நிதிய சபை உறுப்பினர் எதிர்பார்ப்பு
சுப்ரமணியன் தனது கருத்துக்கள் தனக்கே சொந்தம் என்றும், குழுவின் ஒட்டுமொத்த பார்வைக்காக தன்னால் பேச முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவில் உள்ள நாட்டின் பிரதிநிதியின் கூற்றுப்படி, வீழ்ச்சியடைந்த வட்டி வீதங்கள் மற்றும் வெளிநாட்டு கையிருப்புகளின் அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிறிலங்கா அதன் $3 பில்லியன் பிணை எடுப்புக்கான முதல் மதிப்பாய்வில் தேர்ச்சி பெறுவதற்கான வலுவான வாய்ப்பாக உள்ளது.
பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப கடன் நிலைத்தன்மையை அடைவதற்கான தெற்காசிய நாட்டின் முயற்சிகளும் சீராக முன்னேறி வருகின்றன என்று இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பூட்டானை பிரதிநிதித்துவப்படுத்தும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறினார். “பன்னாட்டு நாணய நிதியத்தின் அதிகாரிகள் செப்டெம்பர் மாதம் சிறிலங்காவுக்கு வருகை தனது நிலைமையை ஆய்வு செய்யவுள்ளனர்” என்று குழுவில் உள்ள 24 நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான சுப்ரமணியன் மேலும் கூறினார்.
சிறிலங்காவுக்கான வரவிருக்கும் கடன் வழங்கல் முடிவுகளுக்கு, ஒருமித்த கருத்துடன் செயல்பட முயற்சிக்கும் பன்னாட்டு நாணய நிதியத்தின் ஆளும் குழுவில் பெரும்பான்மையான வாக்களிக்கும் பங்குகள் தேவை. சுப்ரமணியன் தனது கருத்துக்கள் தனக்கே சொந்தம் என்றும், குழுவின் ஒட்டுமொத்த பார்வைக்காக தன்னால் பேச முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.