உயிர் பலிகளை தடுக்க உடனே போரை நிறுத்துங்கள் - ஈரானிடம் வலியுறுத்தியது லெபனான்
ஐநா தீர்மானம் 1701ஐ மேற்கோள் காட்டி, போர் நிறுத்தம் குறித்து பிரதமர் நஜிப் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்திற்கும் இடையேயான போர் இப்போது லெபனான் வரை நீண்டிருக்கிறது. லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு போரை தீவிரப்படுத்துவதாகவும், உடனே போரை நிறுத்த வேண்டும் எனவும் லெபனான் பிரதமர் ஈரானிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஐநா தீர்மானம் 1701ஐ மேற்கோள் காட்டி, போர் நிறுத்தம் குறித்து பிரதமர் நஜிப் வலியுறுத்தியுள்ளார். இந்த தீர்மானத்தின்படி, தெற்கு லெபனானில் லெபனான் இராணுவம் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூறுகிறது. அதாவது ஹிஸ்புல்லா இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இது செயல்படுத்தப்படவில்லை. எனவே, தெற்கு லெபனான் பகுதியிலிருந்து ஹிஸ்புல்லா வெளியேற வேண்டும் என்றும், அதன் மூலம் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் லெபனான் அரசு கூறியிருக்கிறது.