Breaking News
கொல்கத்தாவில் வணிக வரித்துறை அதிகாரி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
வணிகவரித்துறை துணை ஆணையராக இருந்த அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மாலையில் அவரது உடலை மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் கண்டெடுத்தனர்.
வணிகவரித்துறை துணை ஆணையராக இருந்த அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
4 மணியளவில், அவரது பக்கத்து வீட்டுக்காரர் பலமுறை அவரது கதவைத் தட்டியதாக காவல்துறை தெரிவித்துள்ளது . பதில் வராததால், அக்கம்பக்கத்தினர் அதிகாரியின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது கணவர் இறந்து கிடந்தார். சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.