பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஜூன் 12 அன்று சிறிலங்காவின் இரண்டாவது மீளாய்வுக்காக கூடவுள்ளது
"இந்த அமர்வு சிறிலங்காவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்த முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும்" என்று அவர் 'எக்ஸ்' (முன்னர் ட்விட்டர்) இல் ஒரு பதிவில் கூறினார்.

சிறிலங்காவுக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் உறுப்புரை நான்கு (IV) ஆலோசனை மற்றும் இரண்டாவது மீளாய்வு ஆகியவை ஜூன் 12 ஆம் திகதி பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூட்ட நிகழ்ச்சி நிரலில் உள்ளன என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
"இந்த அமர்வு சிறிலங்காவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்த முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும்" என்று அவர் 'எக்ஸ்' (முன்னர் ட்விட்டர்) இல் ஒரு பதிவில் கூறினார்.
பொருளாதார நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் சீர்திருத்த முயற்சிகளை மேலும் மேம்படுத்தும் மூன்றாவது தவணையை திறப்பதற்கான வெற்றிகரமான மீளாய்வுக்கு அனைத்து நாடுகளினதும் தொடர்ச்சியான ஆதரவை சிறிலங்கா எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.
பன்னாட்டு நாணய நிதியத்தின் ஊழியர்களும் சிறிலங்கா அதிகாரிகளும் நான்கு வருட விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஆதரவிலான திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு மற்றும் 2024 பிரிவு நான்கு (IV) ஆலோசனையின் இரண்டாவது மீளாய்வை நிறைவு செய்வதற்காக பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக பன்னாட்டு நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் கடந்த மாதம் தெரிவித்தார்.
"இந்த மீளாய்வு பன்னாட்டு நாணய நிதிய முகாமைத்துவத்தால் அங்கீகரிக்கப்பட்டு பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்று வாரியத்தால் நிறைவு செய்யப்பட்டவுடன், சிறிலங்காவுக்கு சுமார் 337 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி கிடைக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.