Breaking News
ஜப்பான் கடற்கரை அருகே 6.5, 5.0 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள்
குரில் தீவுகளின் தென்கிழக்கு கடற்கரையில் பிற்பகல் 2.45 மணிக்கு 6.5 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானின் கடற்கரைக்கு அருகே வியாழக்கிழமை அடுத்தடுத்து 6.5 மற்றும் 5.0 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
குரில் தீவுகளின் தென்கிழக்கு கடற்கரையில் பிற்பகல் 2.45 மணிக்கு 6.5 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பிற்பகல் 3:07 மணிக்கு 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இரண்டு நிலநடுக்கங்களும் 23.8 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டன. இரண்டாவது நிலநடுக்கம் அதே பகுதியைச் சுற்றி 40 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.