மனித முடியை விட மெல்லியது; உடலுக்குள் நுழைந்து மருந்து செலுத்தும் ரோபோட்கள்

மனிதர்களின் தலைமுடியை விட மெல்லிதான ரோபோட்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோக்கள் திரவத்தில் அதிவேகமாக நீந்தி செல்லக் கூடியவை.
இவற்றை வைத்து மனித உடலில் தேவையன இடத்தில் துல்லியமாக மருந்துகளை செலுத்த முடியும் என நம்புகின்றனர். இதனால் ஒலிஅலைகள் இருந்தாலே பயணம் செய்ய முடியும்.
அவற்றின் அளவுடன் ஒப்பிடுகையில் வேகம் பல மடங்கு அதிகமாக இருக்கும். சிறுநீர் பை போன்ற உள் உறுப்புகளில் மருந்துகளை செலுத்துவது இந்த ரோபோட்கள் மூலம் எளிதாகும்.
இதுபோன்ற சிறிய ரக ரோபோட்களை மைக்ரோபோட் என அழைக்கின்றனர். அறிவியல் உலகின் முக்கிய முன்னெடுப்பாக மைக்ரோபாட்கள் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள கொலராடோ போல்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மைக்ரோமாட் வடிவமைப்பில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளனர். இந்த ரோபோட் மருந்துகளை விரைவாக வழங்கக்கூடிய, சுயமாக இயங்கக்கூடியதாகும்.
மைக்ரோபாட்கள் மருத்துவ துறையில் மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது உருவாக்கப்பட்டுள்ள மைக்ரோபாட்டின் அளவி சராசரியாக 20 மைக்ரோமீட்டர் எனக் கூறப்படுகிறது.
இந்த அளவு மனித முடியை விட மெல்லிதானது. இது ஒரு வினாடிக்கு 3 மில்லி மீட்டர் வேகத்தில் செல்லும். அதாவது ஒரு நிமிடத்தில் அதன் அளவைப் போல 9,000 மடங்கு தூரத்தைக் கடக்கும்.
எளிமையாக சொல்வதென்றால் சிறுத்தையை விட அதிக வேகம். விந்து, பாக்டீரியா போன்ற உடலுக்குள் இருக்கும் சூழலில் நீந்துபவை இந்த மைக்ரோபாட்களை உருவாக்க முன்னுதாராணமாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.