Breaking News
ரொறொன்ரோ சிறைச்சாலையில் கைதி தாக்கப்பட்டு உயிரிழப்பு
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், மூன்று நாட்கள் கழித்து உயிரிழந்தார் என பொலிசார் தெரிவித்தனர்.

ரொறொன்ரோ தென் பகுதியில் அமைந்துள்ள தடுப்பு முகாமில் கடந்த வாரம் ஒரு கைதி மற்றொரு கைதியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி மாலை 6 மணியளவில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பொலிசார் சிறைச்சாலைக்கு அழைக்கப்பட்டனர். தாக்குதலில் கடுமையான காயமடைந்த 27 வயது மங்கோக் அகோல் (Mangok Akol) என்பவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், மூன்று நாட்கள் கழித்து உயிரிழந்தார் என பொலிசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சந்தேகநபராக 32 வயதான ஆண்ட்ரே ஃபோர்டு (Andre Ford) அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபருக்கு எதிராக பொலிசார் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.