சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனர் உட்பட 30 பேருக்கு பிணை
சட்டவிரோத ஒன்றுகூடல் தொடர்பில் காவல்துறைக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 24 முதல் 48 வயதுக்குட்பட்ட குறித்த குழுவினர் மார்ச் 1 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனர் உட்பட 30 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைய தலா 100,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதுடன், மார்ச் மாதம் 06 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதற்கு உத்தரவிடப்பட்டது.
சட்டவிரோத ஒன்றுகூடல் தொடர்பில் காவல்துறைக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 24 முதல் 48 வயதுக்குட்பட்ட குறித்த குழுவினர் மார்ச் 1 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
பின்னர் மட்டக்களப்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அவர்கள் விசாரிக்கப்பட்டனர்.அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 350 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற ஒருங்கிணைந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட கடும்போக்கு இஸ்லாமியக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் (என்.டி.ஜே) பிரிந்து சென்ற உறுப்பினர்களின் தலைவரான சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனர் நியாசும் அடங்குவார் என்று அடையாளம் காணப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் நியாஸின் மூத்த சகோதரர்களும் அடங்குவர் என்று காவல்துறையினர் மேலும் அடையாளம் கண்டனர்.