Breaking News
பாகிஸ்தானின் பொதுத் தேர்தல் ஜனவரி 2024 கடைசி வாரத்தில் நடைபெறும் : தேர்தல் ஆணையம்
பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்து நவம்பர் 30ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் 2024 ஜனவரி கடைசி வாரத்தில் நடைபெறும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகுதிகள் வரையறுப்பது தொடர்பான பணிகளை ஆய்வு செய்துள்ளதாகவும், தொகுதிகள் நிர்ணயம் செய்வதற்கான முதற்கட்ட பட்டியல் செப்டம்பர் 27-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது .
பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்து நவம்பர் 30ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி கடைசி வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது