ஈஸ்டர் தாக்குதல் ஆவணப்படத்தில் எனது கருத்துக்களை சனல் 4 முற்றாக திரித்து கூறியுள்ளது: சரத் கொங்கஹகே
ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னர், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, சிறிலங்கா ஊடகவியலாளர் மற்றும் பிரித்தானியக் குடிமகனான ஃபராஸ் சௌகெதலி, முன்னாள் இராஜதந்திரியைச் சுயாதீன தொலைக்காட்சி செய்திக்காக நேர்காணல் செய்யுமாறு கோரியிருந்ததாக கொங்கஹகே வெளிப்படுத்தினார்.

2019 ஆம் ஆண்டு சிறிலங்காவின் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் குறித்த சமீபத்திய ஆவணப்படத்தில் பேட்டியின் போது, பிரித்தானிய தொலைக்காட்சி வலையமான ‘சேனல் 4’ தனது கருத்துக்களை ‘முற்றிலும் திரித்து’ கூறியதாக முன்னாள் தூதுவர் சரத் கொங்கஹகே குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (செப். 12) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில். ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னர், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, சிறிலங்கா ஊடகவியலாளர் மற்றும் பிரித்தானியக் குடிமகனான ஃபராஸ் சௌகெதலி, முன்னாள் இராஜதந்திரியைச் சுயாதீன தொலைக்காட்சி செய்திக்காக நேர்காணல் செய்யுமாறு கோரியிருந்ததாக கொங்கஹகே வெளிப்படுத்தினார்.
அவரது முழு நேர்காணலின் சூழல் முழு ஆவணப்படத்தில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறி, கொங்கஹகே கூறினார்; “இது முற்றிலும் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளின் செயல் என்று நான் கூறினேன். 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு வெற்றிபெற்றார் என்று அவர்கள் என்னிடம் கேட்டதற்கு, அப்போது அவர் மிகவும் பிரபலமான தலைவராக இருந்ததால் நான் அவர்களிடம் கூறினேன். நேர்காணலுக்காக அவர்கள் எடுத்த இரண்டு பகுதிகள் மட்டுமே இவை என்றேன் என்று கூறினார்.