Breaking News
புத்தாண்டில் செயற்பாடுகளை ஆரம்பித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில்
இந்தியாவுக்கான வருகைக்கு பின்னர் வியாழனன்று (2) இரவு நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி, இந்த ஒன்றுகூடல்களுடன் 2025 ஆம் ஆண்டின் செயற்பாடுகளை ஆரம்பித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க அவர்களின் புத்தாண்டு நடவடிக்கைகள்நேற்று (3) பிடகோட்ட சிறிகொத்த, கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் பிரதான அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.
இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ருவன் விஜேவர்தன, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட கட்சியின் குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவுக்கான வருகைக்கு பின்னர் வியாழனன்று (2) இரவு நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி, இந்த ஒன்றுகூடல்களுடன் 2025 ஆம் ஆண்டின் செயற்பாடுகளை ஆரம்பித்தார்.