ரயில் நிலையங்களில் தமிழ் அல்லது ஆங்கிலம் பேசும் ஊழியர்களை நியமிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு திமுக எம்.பி. கோரிக்கை
“நிலைய தலைவரிடம் (ஸ்டேஷன் மாஸ்டர்) புகார் அளித்த போதிலும், "எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உதவியற்ற பயணிகளுக்கு எந்தட் தீர்வும் வழங்கப்படவில்லை" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்த ரயில்வே ஊழியர்களை உடனடியாக நியமிக்க மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
“இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ரயில் நிலையங்களில் ஊழியர்களுக்குத் தமிழ் புரியாததால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.”
“கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இந்தி தெரியாததால் மக்களுக்கு சரியான சேவை வழங்கப்படுவதில்லை என்றும், தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.”
“கோவில்பட்டி ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யும் எழுத்தருக்குத் தமிழும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. இதனால், பயணிகள் தட்கல் முறையில் முன்பதிவு செய்ய முடியவில்லை. ஏனெனில் பயணிகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் நிரப்பிய முன்பதிவு படிவங்களை வைத்து முன்பதிவு செய்ய முடியவில்லை" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நிலைய தலைவரிடம் (ஸ்டேஷன் மாஸ்டர்) புகார் அளித்த போதிலும், "எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உதவியற்ற பயணிகளுக்கு எந்தட் தீர்வும் வழங்கப்படவில்லை" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“தமிழகத்தில் தங்கள் கடமைகளை திறம்பட நிறைவேற்ற தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்த முன்பதிவு எழுத்தர்களை நியமிப்பது பொருத்தமானது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்தவர்களை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.