Breaking News
சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள கிரேட் ஹால்ஆஃப் தி பீப்பிள் அரங்கில் இந்தக் கூட்டம் நடைபெறும்.
ஜனாதிபதி திசாநாயக்க நாளை சீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்

நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செவ்வாயன்று (14) முற்பகல் சீன ஜனாதிபதி ஷீஜின் பிங்கை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள கிரேட் ஹால்ஆஃப் தி பீப்பிள் அரங்கில் இந்தக் கூட்டம் நடைபெறும்.
இருதரப்பு கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.