Breaking News
பங்களாதேஷிடம் இருந்து வாங்கிய 200 மில்லியன் டாலர் கடனைச் சிறிலங்கா திருப்பி செலுத்துகிறது
செப். 21 அன்று கடன் தொகைக்கு வட்டியாக 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை சிறிலங்கா அரசு செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று ஒப்பந்தத்தின் கீழ் பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனின் இறுதி தவணையாக சிறிலங்கா பங்களாதேஷுக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செப். 21 அன்று கடன் தொகைக்கு வட்டியாக 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை சிறிலங்கா அரசு செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா செப்டம்பர் 02 , 2023 அன்று 100 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் , ஆகஸ்ட் 17 , 2023 அன்று 50 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் திருப்பிச் செலுத்தியது.