பிரதமர் நரேந்திர மோடியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள உடனடியாக நிதியை வழங்குமாறு பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார்.

தமிழக அமைச்சரும், திமுக தலைவருமான உதயநிதி ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள உடனடியாக நிதியை வழங்குமாறு பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து உதயநிதி எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பதிவில், “வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் விரிவான நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசின் சார்பில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். நமது மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கேட்டுக் கொண்டபடி, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் எங்களுக்கு உறுதியளித்தார்". என்று அதில் தெரிவித்துள்ளார்.