Breaking News
தேசபந்து தென்னகோனின் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 19 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆரம்பமானது.
தேசபந்து தென்னகோன் தனது மனுவில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு விசாரணையைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியிருந்தார்.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தென்னகோனின் மனு மீதான மேலதிக விசாரணை மே 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.