இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கத்தின் தலைமைப் பொறுப்பைச் சிறிலங்காஏற்கவுள்ளது
தற்போதைய தலைவரான பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரிடம் தலைவர் பதவியை கையளிக்கும் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சபைக்கு தலைமை தாங்குவார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் சபைக்காக அடுத்த வாரம் சிறிலங்கா வரவுள்ளனர். இது 11 அக்டோபர் 2023 அன்று சிறிலங்காவில் கொழும்பு நகரில் நடைபெறவுள்ளது.
கொழும்பில் நடைபெறும் அமைச்சர்கள் குழு கூட்டத்தில் பங்களாதேஷ், இந்தியா, ஈரான், மொரிஷியஸ், மலேசியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் உட்பட பதினாறு அமைச்சர்களும், அவுஸ்திரேலியா, கொமொரோஸ், பிரான்ஸ், இந்தோனேசியா, கென்யா, ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட மட்ட பங்குபற்றுதலும் காணப்படுகின்றன. மடகாஸ்கர், மாலத்தீவு, மொசாம்பிக், ஓமன், சீஷெல்ஸ், சிங்கப்பூர், சிறிலங்கா, சோமாலியா, தான்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் (உறுப்பினர் நாடுகள்) மற்றும் சீனா, எகிப்து, சவுதி அரேபியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, ரஷ்யன் கூட்டமைப்பு, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய உரையாடல் பங்காளிகள் பங்கேற்பர் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதைய தலைவரான பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரிடம் தலைவர் பதவியை கையளிக்கும் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சபைக்கு தலைமை தாங்குவார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கவுன்சிலுக்கு முன்னதாக, வெளியுறவுச் செயலர் அருணி விஜேவர்தன தலைமையில் இந்தியப் பெருங்கடல் விளிம்புச் சங்கத்தின் மூத்த அதிகாரிகளின் குழுவின் 25வது கூட்டம் நடைபெறும்.