பாலியல் குற்றவாளியின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது மனிடோபா நீதிமன்றம்
அந்த ஆவணத்தில், ஒன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுமிகளின் கிட்டத்தட்ட 8,000 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக படங்கள் மற்றும் காணொலிகள் இருந்தன.

வின்னிபெக் மற்றும் மாகாணத்தின் பிற பகுதிகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை இரகசியமாகப் படம்பிடித்த தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியின் மேல்முறையீட்டை மனிடோபா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த வாரம் நீதிபதி ஜெனிபர் ஏ. பியூட்ஸ்னர் எழுதிய மனிடோபா மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில், குழந்தைப் பாலியல் துஷ்பிரயோக பொருட்களை வைத்திருத்தல், தயாரித்தல் மற்றும் விநியோகித்தல், கவர்ச்சி மற்றும் அம்மணத்தைப் பார்த்து இரசித்தல் ஆகியவற்றிற்காக மேல்முறையீட்டாளரின் 15 ஆண்டு சிறைத்தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.
ஏ.எல்.பி.-சி என்ற முதலெழுத்துக்களால் குற்றவாளி அடையாளம் காணப்படுகிறார். அந்த ஆவணத்தில், ஒன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுமிகளின் கிட்டத்தட்ட 8,000 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக படங்கள் மற்றும் காணொலிகள் இருந்தன.