Breaking News
அனைத்து அரசியல் கட்சிகளுக்காகவும் பாடுவேன்: ரஞ்சன்
கூட்டத்தில் நிகழ்ச்சி நடத்த என்னை அழைத்தார்கள், எனவே நான் அதை ஏற்றுக்கொண்டேன். நான் ஒரு தொழில்முறைப் பாடகன்.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தான் ஒரு பாடகராக மாத்திரமே கூட்டத்திற்கு சென்று நிகழ்ச்சிகளை நிகழ்த்தியதாக தெரிவித்தார்.
"கூட்டத்தில் நிகழ்ச்சி நடத்த என்னை அழைத்தார்கள், எனவே நான் அதை ஏற்றுக்கொண்டேன். நான் ஒரு தொழில்முறைப் பாடகன். எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் என்னை நிகழ்ச்சி நடத்த அழைத்தால் அவர்களுக்காக பாடுவேன்" என்று ரஞ்சநாயக்க தெரிவித்தார்.
"எனக்கு இப்போது குடிமை உரிமைகள் இல்லாததால் பாடல் மற்றும் நடிப்பில் மட்டுமே ஈடுபட்டுள்ளேன். முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இருந்தபோதிலும் எனது குடியுரிமைகளை மீட்டெடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியை உட்பட யாரும் இப்போது பேசுவதில்லை" என்று அவர் மேலும் கூறினார்.