Breaking News
கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
கொழும்பில் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உளவுத்துறையின் குறிப்பிடப்படாத தகவலையடுத்து கொழும்பில் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கொழும்பு கோட்டை, காலி வீதி, கொள்ளுப்பிட்டி, சுதந்திர சதுக்கம், துன்முல்லை சந்தி போன்ற பகுதிகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், அவசரநிலை ஏற்பட்டால் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.