Breaking News
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கில் ஆர்ப்பாட்டம்
அபகரிக்கப்பட்ட நிலங்கள் இல்லாமல் தமக்கு சுதந்திரம் இல்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

சிறிலங்காவின் 77 ஆவது சுதந்திர தினமான நேற்று (பெப்ரவரி 04) வட மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உட்பட பல குழுக்கள் கறுப்புக் கொடிகளை ஏற்றியதுடன், பல பிரதேசங்களில் போராட்டத்தில் பங்கேற்றன.
அதன்படி, வடக்கில் காணாமல் போன உறவினர்கள் மற்றும் அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள் இல்லாமல் தமக்கு சுதந்திரம் இல்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
அதேபோன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் கறுப்புக் கொடி ஏந்தியும், கறுப்புப் பட்டை அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.