சிறிலங்கா மீன்பிடி படகுகளில் 6 மீனவர்களுடன் 2 மீன்பிடிப் படகுகள் மாயம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்திலிருந்துப் புறப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் நான்கு மீனவர்கள் இருந்ததாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

சிறிலங்கா மீனவர்கள் 6 பேரை ஏற்றிச் சென்ற இரண்டு மீன்பிடிப் படகுகள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் படகுகள் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஜூலை 7 அன்று புறப்பட்டுச் சென்றன.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்திலிருந்துப் புறப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் நான்கு மீனவர்கள் இருந்ததாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார். இதேவேளை, ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஒரு நாள் மீன்பிடி படகில் இரண்டு மீனவர்கள் இருந்தனர்.
காணாமல் போன மீனவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடற்படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும், கப்பல்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் கஹவத்த மேலும் தெரிவித்தார்.