வார்த்தையை மீளப்பெற்றுக்கொள்கிறேன்: ரோஹினி குமாரி எம்.பி. தெரிவிப்பு
பாராளுமன்றத்தில் 24-07-2025 அன்றுசிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

“நீங்கள் வாயை மூடிக்கொண்டிருங்கள்'' என்று சபாநாயகரை நோக்கி கூறிய வார்தையை மீளப்பெற்றுக்கொள்கிறேன் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 24-07-2025 அன்றுசிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நான் நேற்று (நேற்று முன்தினம்) உரையாற்றும் போது நீங்கள் வாயை மூடிக்கொண்டிருங்கள் என்று கூறியமை ஊடாக சபாநாயகருக்கோ, அந்த பதவிக்கோ ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அந்தக் கருத்தை நான் மீளப் பெற்றுக்கொள்கின்றேன் என்பதனை கூறிக்கொள்கின்றேன்.
இவ்வாறான கருத்து எனது வாயில் இருந்து வெளிவருவதற்கு காரணமுண்டு. நடுநிலையாக இருக்க வேண்டியவர் அடிப்படை வாதியாக செயற்படும் போது அவ்வாறான கருத்துக்கள் வெளிவரும். எவ்வாறாயினும் அந்தக் கருத்தை நான் மீளப் பெற்றுக்கொள்கின்றேன் என்றார்.