Breaking News
ஸ்டார்லிங்க் இந்த மாதம் சிறிலங்காவில் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்
நாடு முழுவதும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இணையப் பொருளாதாரப் பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப பில்லியனர் எலோன் மஸ்க்கின் செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்கை வரவேற்க சிறிலங்கா தயாராகி வருகிறது, வணிக நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இணையப் பொருளாதாரப் பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இந்த மாதத்தில் வணிக நடவடிக்கைகளை தொடங்க முடியும், உத்தியோகபூர்வ வெளியீட்டை எளிதாக்குவதற்கு தேவையான அடித்தள வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன" என்று வீரரத்ன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.