எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா கைது
அவர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று (29) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் வைத்து சிறப்புக் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
அனுராதபுரம் ரம்பேவ பிரதேசத்தில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஜனவரி 20 ஆம் திகதி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான உண்மைகள் அனுராதபுரம் காவல்துறையால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சம்பந்தப்பட்ட வழக்கை ஜனவரி 22 ஆம் திகதி அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் சரியான சந்தேகக் குற்றவாளியை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஒத்திவைக்க உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கு பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.