குர்ஸ்க் பகுதியில் ரஷ்யா, வடகொரிய படைகளுக்கு கடும் இழப்பு: ஜெலன்ஸ்கி
உக்ரேனிய எல்லையில் இருந்து வெகு தொலைவில் இல்லாத மக்னோவ்கா கிராமத்திற்கு அருகே போர்கள் நடந்ததாகக் கூறினார்.

ரஷ்யாவின் தெற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த சண்டையில் ரஷ்யா மற்றும் வட கொரிய படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி சனிக்கிழமை தெரிவித்தார்.
குர்ஸ்க் பிராந்தியத்தில் சுமார் 11,000 வட கொரிய துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரேனிய மற்றும் மேற்கத்திய மதிப்பீடுகள் கூறுகின்றன, அங்கு ஆகஸ்ட் மாதம் ஒரு பாரிய எல்லை தாண்டிய ஊடுருவலை நடத்திய பின்னர் உக்ரேனிய படைகள் பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன.
தனது இரவு வீடியோ உரையில், ஜெலென்ஸ்கி உயர்மட்ட உக்ரேனிய தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி, உக்ரேனிய எல்லையில் இருந்து வெகு தொலைவில் இல்லாத மக்னோவ்கா கிராமத்திற்கு அருகே போர்கள் நடந்ததாகக் கூறினார்.
"குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மக்னோவ்கா என்ற ஒரு கிராமத்திற்கு அருகில், நேற்றும் இன்றும் நடந்த சண்டைகளில், ரஷ்ய இராணுவம் வட கொரிய காலாட்படை வீரர்கள் மற்றும் ரஷ்ய துணை துருப்புக்களின் ஒரு பட்டாலியனை இழந்தது குறிப்பிடத்தக்கது." என்று ஸெலென்ஸ்கி கூறினார்.
ஜனாதிபதி விபரங்கள் எதனையும் வழங்கவில்லை.