ஜப்பானில் தொழில்நுட்பத் தகவல்களை கசியவிட்ட சீனக்குடிமகன் கைது
நியாயமற்ற போட்டிச் சட்டங்களை மீறியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையின் பேச்சாளர் ஏஎப்பி (AFP) நிறுவனத்திடம் தெரிவித்தார்.

சீன நிறுவனத்திற்கு முக்கியமான தொழில்நுட்பம் குறித்த தகவல்களை கசியவிட்டதாகச் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் வியாழக்கிழமை ஜப்பானில் கைது செய்யப்பட்டதாக டோக்கியோவில் உள்ள காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜப்பானிய ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த 59 வயதான நபர், நியாயமற்ற போட்டிச் சட்டங்களை மீறியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையின் பேச்சாளர் ஏஎப்பி (AFP) நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஏப்ரல் 2018 இல், அந்த மனிதர், "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டஸ்ட்ரியல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் உள்ள ஒரு மின்னஞ்சல் கணக்கிலிருந்து, சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு ஃவுளூரின் கலவையை ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்களை மின்னஞ்சல் செய்ததாகக் கூறப்படுகிறது," என்று பெயர் வெளியிட மறுத்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.