பெங்களூரு தொழில்நுட்ப வல்லுநர் தற்கொலை வழக்கு: அதுல் சுபாஷ் மனைவிக்கு பிணை
இந்த வழக்கில் பிணைகோரி நிகிதா சிங்கானியா, நிஷா சிங்கானியா மற்றும் அனுராக் சிங்கானியா ஆகியோர் பெங்களூரு நகர உரிமையியல் நீதிமன்றத்தை அணுகினர்.
பெங்களூரு தொழில்நுட்ப வல்லுநர் தற்கொலை வழக்கு: அதுல் சுபாஷ் மனைவிக்கு பிணை
தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் அதுல் சுபாஷின் மனைவி மற்றும் மாமியாருக்கு பெங்களூரு நீதிமன்றம் சனிக்கிழமை பிணை வழங்கியது. அதுல் சுபாஷ் தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் நிஷா சிங்கானியா (அதுலின் மாமியார்) மற்றும் அனுராக் சிங்கானியா (அவரது மைத்துனர்) உள்ளிட்ட அவரது குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டி டிசம்பர் 9 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் பிணைகோரி நிகிதா சிங்கானியா, நிஷா சிங்கானியா மற்றும் அனுராக் சிங்கானியா ஆகியோர் பெங்களூரு நகர உரிமையியல் நீதிமன்றத்தை அணுகினர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் பிணை மனுவை விரைவாக முடிக்க அமர்வு நீதிமன்றத்திற்கு அறிவுறுத்துமாறு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்பு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த மனுவை இன்று விசாரிக்க அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.